← Back to Song List

769. அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

1.

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா உந்தன் நேசர் ஆவலாய் அழைக்கிறார் – இதோ

2.

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார்

3.

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர் நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார்

4.

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர் இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார் துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார்

5.

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார் சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ — அழைக்கிறார்

6.

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக் கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே — அழைக்கிறார்

7.

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே ! வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் — அழைக்கிறார்