← Back to Song List

6400. நீர் ஒருவரே உன்னதர்

1.

நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர் ஒருவரே ஆராதனைக்குரியவர் -2 யாருண்டு உமக்கு நிகராய் உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே)

2.

1. போற்றப்பட தக்கவர் நீரே புகழப்பட தக்கவர் நீரே -2 பரிசுத்த நாமமுள்ளவரே பரலோக தேவனே -2 (யாருண்டு)

3.

2. மகிமையால் நிறைந்தவர் நீரே வல்லமையில் சிறந்தவர் நீரே -2 மாறாத என் இயேசுவே மன்னாதி மன்னனே -2 (யாருண்டு)

4.

3. சேனைகளின் கர்த்தரும் நீரே செயல்களில் வல்லவர் நீரே -2 சாத்தானை தோற்கடித்தவரே சாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு)

நீர் ஒருவரே உன்னதர் | Tamil Song Lyrics