← Back to Song List

514. ஆவியை அருளுமே, சுவாமீ,

1.

ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே!

2.

1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ? நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ? முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ? முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

3.

2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம், பரம சந்தோஷம், நீடிய சாந்தம், தேவ சமாதானம், நற்குணம், தயவு, திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை

4.

3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@ திரி யவியாமலே தீண்டியே யேற்றும், பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும், பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை