4864. கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே நல்லகேடகத்தைப் பிடி நீ விசுவாசக்கேடகத்தைப் பிடி நீ.
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனைவன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்லநிச்சயமான பரிசை அறிந்து நீ. – கிஞ்சிதமும்
1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,பத்தியில் தெளிக்கவும், நித்யஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். – கிஞ்சிதமும்
2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,கண்டடைந்தார் பேறு? நல்லதொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்தொகுத்து வெவ்வேறுவிண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும், கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பலகாரியங்களையும் பார் இது மா ஜெயம்.– கிஞ்சிதமு
3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திடஉன் செயல் மா பேதம் அதின்தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,துணை அவர் பாதம்ஏற்றர வணைக்கவே பணிவாக இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்தஆவி உதவியை மேவி, அடைந்து, நீ. – கிஞ்சிதமும்