← Back to Song List

3584. இந்தக் குழந்தையை நீர்

1.

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த

2.

1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த

3.

2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த

4.

3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும், உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த

5.

4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல், நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! – இந்த

6.

5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப், பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. – இந்த