← Back to Song List

3328. ஞானஸ்நான மா ஞானத்திரவியமே

1.

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு நாமம் ஜலமோடு சேர்.

2.

1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட, ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க, நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான

3.

2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள் செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான

4.

3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக் கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்! அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் – ஞான