2818. என்னாலுரைக்க முடியாதே
என்னாலுரைக்க முடியாதே-என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே.
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என்
1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி வியந்து விரைந்து பாடுவேனே நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என்
2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப் பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே, ஆவல் ஆசையும் அகற்றினாரே-தேவ அன்பினை அகத்துள் ஊற்றினாரே தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க, ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும் – என்
3. சத்துருவினால் விளைந்த கேட்டை-எல்லாம் தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை. பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப்-பெறப் பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை; இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத் தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான் அஞ்சிடேன் இனி. – என்
4. ஆசைமிகும் யேசு பெருமானே!-பதினாயிரம் பேரில் சிறந்த கோனே! வாச லீலிப்பூவே சீவதேனே!-வான மன்னாவே இலங்கு கதிரோனே! மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும் நேசத்தால் மகிழ்ந்றென்தென்றும் நீடுவாய் கிருபைகள் சூடுவாய் தோத்திரம் – என்