257. ஆராதனை நாயகன் நீரே
1.
ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே -2 ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2
2.
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே -2 விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் -2
3.
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தெய்வம் நீரே -2 முழங்கால் யாவும் முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே -2
4.
முடிவில்லா இராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் -2 ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -2