← Back to Song List

2049. தேவனே நான் உமதண்டையில்

1.

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்

2.

மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே

3.

யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே

4.

பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா என்றன் தேவனே கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னை அழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே

தேவனே நான் உமதண்டையில் | Tamil Song Lyrics