2048. தேவனே நான் உமதண்டையில்
தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்
மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே
யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே
பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா என்றன் தேவனே கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னை அழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே
நித்திரையினின்று விழித்து — காலை எழுந்து கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன் இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே என்றான் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் — தேவனே
ஆனந்தமாம் செட்டை விரித்து — பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை கிட்டிச் சேர்வேன் — தேவனே